தமிழர் திருநாளுக்கும் இந்துக்கள் பண்டிகைக்கும் உள்ள வேறுபாடு

தொடர்புடைய படம்


தமிழர் திருநாளுக்கும் இந்துக்கள் பண்டிகைக்கும் உள்ள வேறுபாடு
-------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர் விழாக்கள் தமிழ் நாட்காட்டி அடிப்படையில் அமையும்.
இந்துக்களின் பண்டிகைகள் திதி அடிப்படையில் அமையும்.

தமிழர்கள் கொண்டாடும் தமிழர் திருநாள் தமிழ் நாட்காட்டியின் படி தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுவது. இந்த தை முதல் நாளை அடிப்படையாகக் கொண்டு போக்கித் திருநாள், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று வகைப்படுத்தி இவ்விழா கொண்டாடப்படுகிறது. 



இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள்  திதி அடிப்படையில் கொண்டாடப்படுவது. 


இந்த திதி அடிப்படையில் அமைந்த விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் அது அவர்களின் விழாக்களாகாது.


திதியின் அடிப்படையில் நாட்களை அனுசரிப்பது பிராமணீயக் கணக்காகும். இந்து மதத்தை உருவாக்கிய பிராமணர்கள் இந்துக்கள் பண்டிகைகளை திதிகளின் அடிப்படையில் அமைத்துக்கொண்டனர். இந்துக்கள் அல்லாத இந்தியாவின் 97 விழுக்காடு பெரும் பகுதி மக்கள் தங்களை இந்துக்கள் என்று நம்பத் தொடங்கிய பின் அவர்களும் பிராமணர்களின் விழாக்களை கொண்டாடத் தொடங்கிவிட்டனர். 

இந்துமதத்தை உருவாக்கிய பிராமணர்கள் ஏன் திதி கணக்கு முறையை கைகொண்டனர் என்றால் அவர்களுக்கென்று நாட்காட்டி முறை இல்லாததுதான் காரணம். 



நிலவு வளர்வதையும், தேய்வதையும் அடிப்படையாகக் கொண்டு நாட்களை எண்ணுவதே திதி கணக்கு என்பதாகும். தமிழ் நாட்காட்டி பூமிக்கும் ஞாயிறுக்கும் உள்ள தொடர்பை அடிப்படையாகக் கொண்டு மிகத் துள்ளியமாகக் கணக்கிடப்பட்டதாகும். 

பிராமணர்கள் கணக்கிடும் திதி கணக்கு துள்ளியத் தன்மை கொண்டதல்ல. அவர்களின் விழாவான ஒரு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும், மறு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் இடையில் 365,25 நாட்கள் என்ற இடைவெளி சரியாக இருக்காது. ஆனால் ஒரு பொங்கல் திருநாளுக்கும் அடுத்தாண்டு வரும் பொங்கல் திருநாளுக்கும் இடையில் மிகச் சரியாக 365.25 நாட்கள் இடைவெளி இருக்கும். 

பிராமணர்களின் திதி கணக்கு தமிழ் மாதங்களின் அடிப்படையிலும், திதி அடிப்படையிலும் மிகுந்த குழப்பமான தன்மை கொண்டது. 
தமிழர்கள் நாட்காட்டி தெளிவானது. 

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா