மாணவர் சேர்ப்புக்கான கால நீட்டிப்பு...

tamil university logo க்கான பட முடிவு

பேராவூரணியில் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி - மாணவர் சேர்ப்புக்கான கால நீட்டிப்பு...
பேராவூரணி தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி மையத்தில் நடைபெற்றுவரும் 2016-2017 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்ப்பு சனவரி 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் கல்வி மையம் பேராவூரணி வாரச்சந்தை எதிரில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் அறிவித்துள்ளபடி இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான கல்வியாண்டு மாணவர் சேர்ப்பு சனவரி 31 வரை நீடித்து மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இப்பாடப்பிரிவுகளில் தற்போது சேர்ந்து படிக்கும் மாணவர்கள் வரும் மே மாதம் நடைபெறும் பல்கலைக்கழக தேர்வுகளை பேராவூரணியிலேயே எழுத முடியும். இங்கு சேர்ந்து பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு கல்விக்கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்படியும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வழிகாட்டப்படுகிறது.​மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப் பல்கலைக்கழக மைய ஒருங்கிணைப்பாளர் நா. வெங்கடேசனைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 9842609980.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா