பேராவூரணி, பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருது பெற்றுள்ள முடச்சிக்காடு முனைவர் அகிலன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. முனைவர் அகிலன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரளாளராக பணியாற்றுகிறார். தமிழ்வழிக் கல்வி இயக்கம் முன்னெடுத்த இவ்விழாவில் திருக்குறள் பேரவை தலைவர் ஆறு.நீலகண்டன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் விருத்தாளரை வாழ்த்தி பேசினார். அவர் தனது வாழ்த்துறையில், "போற்றத்தக்க மனிதர் அகிலன். அவருக்கு விருது கிடைத்திருப்பது பொருத்தமானது. படிக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அகிலனுக்கு அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்திட ஏற்பாடு செய்வோம்"என்றார். ஆனந்த விகடன் துணை நிர்வாக ஆசிரியர் எழுத்தாளர் வெ.நீலகண்டன், மருத்துவர் துரை.நீலகண்டன், குமுதம் டாட் காம் நேர்காணல் நெறியாளர் வளன்அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்புரையாற்றிய வெ. நீலகண்டன் தனது உரையில், "அகிலன் முடச்சிக்காடு கிராமத்தில் படிக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக