இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாய்மையைப் போற்றியவர்

படம்
பேராவூரணி மருத்துவப் பணியின் அடையாளமாக திகழ்ந்தவர் மருத்துவர் இராஜலட்சுமி. 2024 டிசம்பர் 16 அன்று இயற்கையை எய்தினார். எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளிலும் கருவுற்ற தாய்மார்களின் கடவுளாக காட்சி தந்தவர். இந்த காலகட்டங்களில் தான் மருத்துவமனைக்கு வந்து மகப்பேறு சிகிச்சை பெறுவது தொடங்கி இருந்து.   அந்த காலங்களில் குழந்தை பிறப்புகள் வீட்டில் தான் நடந்தது. மகப்பேறு என்பது மரணத்தோடு போராடி வெல்வது.  இனம் புரியாத வெவ்வேறு விதமான வலிகளின் காரணங்களை புரிந்து கொள்ள முடியாமல் கருவுற்ற தாய்மார்கள் புலம்பிய காலம்.   அந்த காலத்தில் கருவுற்ற தாய்மார்களின் கரங்களைப் பற்றி ஊக்கம் கொடுத்து புதிய புதிய மனித உயிர்களை இந்த உலகுக்கு வரவேற்றவர் மருத்துவர் இராஜலட்சுமி. பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலராக பணியாற்றியவர்.    நமது ஊரகப் பகுதிகளில் கொத்துக் கொத்தாக பரவிய தொற்று நோய்களுக்கு பல உயிர்களை பலி கொடுத்து வந்த மருத்துவ அறிவியலின் தொடக்க காலத்தில் மருத்துவமனைகளின் பயனை மக்களிடம் பரப்பியவர்.   குறிப்பாக நம் பகுதிகளில் பெண்கள் மருத்துவம் ப...

பேராவூரணியில் பாரதியார் பிறந்தநாள் விழா

படம்
பேராவூரணி பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பெற்றுள்ள பாரதியின் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி கலை இலக்கிய பேரவை, பேராவூரணி தமிழ் மன்றம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், திருக்குறள் பேரவை, தமிழ்வழிக் கல்வி இயக்கம் போன்ற அமைப்புகளின் சார்பில் பொறுப்பாளர்கள் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பாரதியாரின் புகழ் ஓங்குக, பெண்ணுரிமை போற்றுவோம், மனிதநேயம் காத்திடுவோம், மதவாதம் ஒழித்திடுவோம் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  பேராவூரணி தமிழ் மன்றம் பொறுப்பாளர்கள் புலவர் சு.போசு, பாரதி வை நடராஜன், பாரதி கலை இலக்கிய பேரவை கே வி கிருஷ்ணன், கே பி சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் மூர்த்தி, பன்னீர்செல்வம், வட்டார செய்தியாளர்கள் சங்கத் தலைவர் கான்முகமது, திருக்குறள் பேரவை செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஜகுபர் அலி, கணேசன் கொத்தனார், பொன் காடு கணேச...

ராயவரம் பள்ளியில் நூலக வார விழா

படம்
புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம், சு கதி காந்தி உயர்நிலைப் பள்ளியில் நூலக வார விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நூலக வார விழா கொண்டாடப் பெற்று வருகிறது. அறக்கட்டளையின் அகடமிக் பிரிட்ஜ் கோர்ஸ் நடைமுறையில் உள்ள பள்ளிகளில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் மாணவர்களைக் கொண்டு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.  புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிகள் ராயவரம் சு கதி காந்தி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  57வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற இந்த போட்டிகளில் ராயவரம் சு கதி காந்தி உயர்நிலைப் பள்ளி மாணவி ஜனனி கட்டுரை போட்டியில் முதலிடமும், மாணவி தாட்சாயினி பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றனர்.   வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வெற்றிக் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். ...

சிறந்த பள்ளிக்கான விருதினைப் பெற்ற திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

படம்
திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அதிக கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான ஏபிசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த பள்ளிக்கான விருதினை தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கி உள்ளது.  சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் இதற்கான விருது வழங்கப்பட்டது.   இந்தத் திட்டத்திற்கான அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நா வெங்கடேசன் மற்றும் திட்ட ஆசிரியர்கள் சந்திரா, சோனியா காந்தி ஆகியோர் தலைமையாசிரியர் சு.ஜெயமணி அவர்களிடம் அறக்கட்டளை வழங்கிய விருதினை கொடுத்து மகிழ்ந்தனர்.  சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாராட்டினார். பள்ளியில் நடைபெற்ற எளிய விழாவில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.