தோழர் ஆறு.நீலகண்டன் அவர்களுக்கு திசைகள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழின மீட்பு, சமூக நீதி, பெண்ணுரிமை, மனித குல இழிவுகளுக்கு எதிரான மனித உரிமைச் செயல்பாடுகள், சூழலியல் பாதுகாப்பு, திருக்குறள் பரப்புரை என பன்முக ஆளுமை கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்... தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கொளக்குடி அமரசிம்மேந்திரபுரம் பகுதியில் நிலவி வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இழிவுகளை ஒழித்துக் கட்ட 2004 ஆம் ஆண்டு அப்பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி கோவில் நுழைவு போராட்டம் நடத்தி சிறை சென்றவர்... 1998 இல் குடிமனை நில மீட்பு போராட்டம் நடத்தி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரக்குடி மணக்காடு பகுதியில் 44 ஏழை எளிய குடும்பங்களுக்கு குடிமைப் பட்டா பெற்றுக் கொடுத்தவர்... பேராவூரணி நகர் பகுதியில் சூழ்ந்திருக்கும் பள்ளிகளையும் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பேராவூரணி பேரூராட்சி பகுதிக்குள் டாஸ்மாக் கடைகள் நடத்தக்கூடாது என்ற இவரின் வீரஞ்செறிந்த போராட்டம் காரணமாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மதுக்கடைகள் இல்லாத பகுதியாக மாறி நிற்கிறது... நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து உருவான பெரும் போராட்டக் கட்டமைப்புக்கு ஆதா