இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'பொன்னியின்_செல்வன்' படிக்க வேண்டாம்! கேட்கலாம்.. கதையாய் சொல்கிறார் பேராவூரணி கவிதா!

படம்
  தொண்ணூறுகளில் தமிழ் வாசகர்களை சுமார் 5 ஆண்டுகள் கட்டிப்போட்ட காவியம் பொன்னியின் செல்வன். வரலாற்று புனைவுகளின் உச்சம், ஆசிரியர் கல்கி அவர்கள் திரட்டிய திரவியம். இந்நாவலின் பாத்திரப் படைப்புகளை படித்தவர்கள் கூறும் போது மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கான விருந்து. முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் தொடங்கி நடிப்புலக நாயகன் கமலஹாசன் வரை வெள்ளித்திரையில் வெளியிட ஆசைப்பட்ட காவியம். கலை சார்ந்த படைப்புலகை ஆட்டிப்படைப்பவர்கள் அத்தனை பேரும் அவரவர் படைப்பின் வழி இந்த கதையை பரப்பிட நினைப்பார்கள். தமிழர்களின் விதைப்பு திருநாளான ஆடிப்பெருக்கு பெருமிதத்தோடு தொடங்கும் இந்நாவல் தமிழர்களின் வாழ்வியலை அழகியல் ததும்பத் ததும்ப கூறுகிறது. இவ்விலக்கிய நூல் இளம் தலைமுறைகளிடம் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் கதையாக சொல்கிறார் கவிதா. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. தஞ்சாவூர் மாவட்டம், #பேராவூரணியைச் சேர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நாயகர்களை மக்கள் படித்துத் தெரிந்து கொண்டதை விட, பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டது தான் அதிகம். ஆண்டுதோறும் கோவில் திருவிழாக்

பெரியாரிய ஆத்திச்சூடி

படம்
அறிவைப் பகு! ஆழச் சிந்தி!  இழிவை ஒழி!  ஈரோட்டு கிழவன் பார்!  உண்மையாய் உழை!  ஊரை இணை!  எட்டி உதைச் சாதியை!  ஏணியாய் பிடி சமூகநீதியை!  ஐதீகம் திறுத்து!  ஒழுக்கம் மறவாதே!  ஓங்கி அடி மநுவை!  ஔடதமே! பெரியாரியம்! இஃதே! வழி! விழி! -கலை

"ஐயா மரம் தங்கச்சாமி" பள்ளி பாடத்தில் சேர்த்திட வலியுறுத்துவோம்

படம்
"வாழ்க மரங்களுடன்" இது ஐயாவின் மந்திரச்சொல். ஆண்டுதோறும்  மாலையிட்டு நோன்பிருந்து மரம் வளர்த்த பெருமகன். "ஜாதியை வளர்க்காமல்,  ஜாதி மரங்களை நட்டு வளருங்கள்"  என்று கூறி பல்லாயிரக்கணக்கான மரங்களை சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் வளர்த்து பசுமை காட்டை உருவாக்கி அதற்கு கற்பகச் சோலை என்று பெயரிட்டவர். உலகத் தலைவர்களின்  பிறந்தநாள் நினைவு நாள்களில் மரக்கன்றுகள் நட்டு அடர் காட்டை உருவாக்கிய அற்புதமான மனிதர். தன்னை அழைக்கும் மணவிழா நிகழ்வுகளுக்கு மரக்கன்றுகளோடு சென்று மணமக்களை வாழ்த்தும் மரபை உருவாக்கியவர். மரக்கன்றுகளை திருமண தாம்பூலம் ஆக மக்களுக்கு கொடுக்க வைத்தவர். கார்ப்பரேட் சாமியார்களையும் சமூக மாற்றத்திற்காக பணியாற்ற வைத்த பண்பாளர். இயற்கை வேளாண் குறித்தும் மரம் வளர்ப்பு குறித்தும் மாநாடுகளை நடத்தியவர். சூழலியல் பாதுகாப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் பள்ளிக்கூடமாக தான் வளர்த்த கற்பகச் சோலையை  மாற்றியவர். உலகத்தின் ஒப்பற்ற இதழ்களில் உயர்வாக போற்றப்பட்ட செந்தமிழ்ச் செல்வர். சேந்தன்குடியின் செல்வமகன் ஐயா மரம் தங்