இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"அரசுப் பள்ளியில் படித்தே வங்கியில் உயர் அதிகாரியானேன்" - பேராவூரணி வங்கி மேலாளர் பெருமிதம்.

படம்
பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களோடு பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் திரு இராகவன் சூர்யேந்திரன். மேலும் வங்கி சார்பில் பள்ளியில் அமையவுள்ள நூலகத்திற்கு இருக்கைகள் வழங்கி மாணவர்களோடு உரையாடிய முதன்மை மேலாளர், "நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அரசுப் பள்ளியில் படித்துதான் வங்கியில் அதிகாரியாக உயர்ந்துள்ளேன். நீங்களும் நன்றாகப் படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம். பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்" என்று கூறினார். நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலச்சந்தர், பேரூர் மன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி சதீஸ், ராஜலெட்சுமி ராமமூர்த்தி, அரசுக் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் பா.சண்முகப்பிரியா, எழுத்தாளர் கா.கான்முகமது, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சரண்யா, உறுப்பினர் சித.திருவேங்கடம், கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த.பழனிவேல், தமிழ்வழிக் கல்வி இயக்கப் பொறுப்பாளர்கள் பாரதி ந. அமரேந்திரன்,

குறைந்தபட்ச தேவை ஒரு லட்சம் ரூபாய்

படம்
  "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று அறம் பாடுகிறது தமிழ். பேராவூரணி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் பாந்தகுளம் பகுதியில் பாட்டி - தாத்தா ஆதரவில் அம்மா, தங்கையோடு வசித்து வருகிறார் சேக் அப்துல்லா. படிப்பில் படு சுட்டியான சேக் அப்துல்லா தந்தையை தனது சிறு வயதிலேயே பறிகொடுத்தவர். தாத்தா பாட்டி ஆதரவில் அன்னையின் அரவணைப்பில் ஆரம்பப் பள்ளியை பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்து, மருத்துவம் படிக்க ஆயத்தமாகி வருகிறார். தொடக்கப்பள்ளி முதலே வகுப்பில் முதல் இடத்தைத் தனக்கு உரியதாக மாற்றிக் கொண்டவர் சேக் அப்துல்லா . "நீ பெரிய டாக்டராகி ஏழை-பாழைகளுக்கு உதவனும்" என்ற பாட்டியின் விருப்பமே இவரின் இலக்காகிப் போனது. யார் கேட்டாலும் நான் "டாக்டராவேன்" என்று பெருமிதமாகச் சொல்லுவான் அப்துல்லா. அப்போதெல்லாம் அவனுக்குத் தெரியாது பள்ளிப் படிப்புக்குப் பின் மருத்துவராக வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதவேண்டும் என்று. "அப்துல்லா

மாவட்ட ஆட்சியரால் பாரட்டப்பெற்றார் மரங்களின் காதலர் சி.மணிவண்ணன்

படம்
  பேராவூரணி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர் ஐயா சி.மணிவண்ணன். பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களில் பணியாற்றியிருக்கிறார். எளிய மக்களின் பக்கம் நின்று இவரின் செயல்பாடுகள் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களின் பாதைகளுக்கு வழியமைத்துத் தந்தவர். சில கிராமங்களில் நூற்றாண்டு கால பாதைச் சிக்கல்களை பக்கத்தில் நின்று தீர்வு கண்டிருக்கிறார். திருவத்தேவன் கிராமத்தில் இவர் பணியாற்றிய காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து சோலைக்காடு செல்ல சுமார் 7 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை கண்டு கலங்கினார். திருவத்தேவன் புதுத்தெரு முதல் பூமாரியம்மன் கோயில் வரை உள்ள பட்டாதாரர்களிடம் பேசி சோலைக்காடு கிராமத்திலிருந்து திருவத்தேவன் செல்வதற்கு வசதி செய்து கொடுத்தவர். புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்துகூட தனி நபர்களை வெளியேற்ற பெரும் போராட்டத்தையும் சட்டம் ஒழுங்குச் சிக்கலையும் வருவாய்த்துறை எதிர்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். இந்தக் காலத்தில் தனி நபர்களிடம் பேசி பட்டா நிலத்தை பாதைக்காக பெற்று தந்த இவரின் செயல் இப்பகுதி மக்களால் இன்றும் போற்றப்படுகிறது. சூ