தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு!
தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிட ம் இ ருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு! தமிழ் மொழிக்காகவும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் செயல்பலசெய்த சமூக செயற்பாட்டாளர் ஆசிரியர் ஐயா காசிலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு கொத்தமங்கலம், வாடிமாநகர், பொது அரங்கில் நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி இயக்கம் மற்றும் அறமுரசு இயக்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு தோழர் குணசேகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஐயா காசிலிங்கம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து பேசிய மருத்துவர் துரை. நீலகண்டன், "நாம் எல்லாவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகளையும், அமேரிக்காவையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம். குறிப்பாக நமது ஆட்சியாளர்கள் வெளிநாடுகளை சான்றாகக் காட்டி நம்நாட்டின் சுற்றுச்சூழல் குறித்து விரிவாகப் பேசி வருகிறார்கள். அந்நாட்டின் தொழில் நுட்பங்களையெல்லாம் நம் நாட்டில் நடை முறைப்படுத்திட முயலுகிறார்கள். ஆனால் வெளிநாட்டினர் த