தமிழ் வழிக் கல்வி இயக்கம் பொறுப்பாளர்கள் நியமனம்.

 தமிழ் வழிக் கல்வி இயக்கம் பொறுப்பாளர்கள் நியமனம்.

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.

அ.சி. சின்னப்பத்தமிழர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய பொறுப்பாளர்கள்
தலைவராக அ.சி.சின்னப்பத்தமிழர், செயலாளராக வை.தேனரசன், பொருளாளராக த.மணிசேகரன், இணைத் தலைவராக பெ.சிலம்பூர்க்
கிழான், துணைத் தலைவராக த.செந்தமிழ் வேந்தன், இணைச் செயலாளராக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், துணைச் செயலாளராக மெய்யன்பன், கொள்கை பரப்புச் செயலாளராக இரா.அரங்க நாடன், சட்டக் கருத்தாளராக கு.ஞ.பகத்சிங் மற்றும்
மாவட்டப் பொறுப்பாளர்களாக
நற்றமிழர், செல்வம், பஞ்சு, தவமணி, வி.திருமால், செ.சரவணன், கண்ணதாசன், தமிழ்த் தென்றல், பேராவூரணி த.பழனிவேல், சேவியர், ந.அரத்தினம், தங்கச்சாமி, பொன்.தங்கராசு, குமரேசன், செருவை மு.ரெ. முத்து, பெ.குணசீலன் , சாரங்கபாணி, மீனாட்சிசுந்தரம், செ.பொழிலன்
பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்வில்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டி நடைமுறைப் படுத்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது,
சித்தமருத்துவ ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது,
மேலும்
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்,
தமிழ் வழியில் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் அரசுப் பணி வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்,
அவசரநிலை காலத்தில் இந்திய ஒன்றியத்தால் முறையற்ற முறையில் பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கல்வித்துறையை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அறிவித்துவிட்டு கலை அறிவியல் மருத்துவம் பொறியியல் சட்டம் போன்ற பாடங்களை தமிழ் வழியில் நடத்தாமல் இருப்பது இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும். எனவே ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழ் மொழியில் நடத்த வேண்டும், தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் செயல்படும் வங்கிகள் அஞ்சலகங்கள் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற இந்திய ஒன்றிய அரசின் நிறுவனங்களில் அனைத்து படிவங்கள் மற்றும் அறிக்கைகள் தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
நிகழ்வை, விளவை செம்பியன், செல்வமணியன், இரா.உதயகுமார்,
பாரி, கதிரவன் ஆகியோர் முன்னின்று நடத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா