ஊராட்சி மன்றத் தலைவர் தலையீட்டால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது!

ஊராட்சி மன்றத் தலைவர் தலையிட்டு  டாஸ்மாக் கடை மூடப்பட்டது!
----------
பேராவூரணி அருகில் உள்ளது ஒட்டங்காடு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது.

 கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு அடைக்கப்பட்ட இந்த கடை  தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு பின் மீண்டும் இன்று திறப்பதாக இருந்தது.

இந்நிலையில் இந்த கடைக்கு அருகில் கூட்டுறவு அங்காடி இருப்பதாலும் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருமளவு மதுப் பிரியர்கள் ஒட்டங்காடு கிராமத்தில் கூடி விடும் அபாயம் இருப்பதாலும் இந்த கடையை மூட வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ரெ. ராஜாக்கண்ணு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பட்டுக்கோட்டை துணை ஆட்சியர் ஆகியோரிடம் முறையிட்டனர்.

ஒட்டங்காடு ஊராட்சிமன்ற தலைவர் ராஜாக்கண்ணு மற்றும் ஒட்டங்காடு, கட்டயங்காடு, காலகம், புனல்வாசல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்களின் தலையீட்டின் பேரில் ஒட்டங்காடு டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோய் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதாகக் கூறப்படும் இந்தச் சூழலில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட கூடாது என்று பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஒட்டங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களின் செயல்பாடு போற்றுதலுக்குரியது.  மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா