கருத்தியல்.... பொருளியல்.....
கருத்தியல்.... பொருளியல்.....
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
கற்பனையான விதிகளை அனுமானித்து நம்பி நடப்பது கருத்தியல்
அனுபவ விதிகளை நம்பி நடப்பது பொருளியல்
செயல்கள் நாடகமே... நாம் நாடக நடிகர்கள்.... ஒவ்வொரு விளைவுக்குமான காரணம் நம் கையில் இல்லை என நம்புவது கருத்தியல்.
ஒவ்வொரு செயலுக்கும் உரிய விளைவுகள் இருக்கும் என நம்புவது பொருளியல்.
கடவுள், வர்ணம், சாதி அடிப்படையில் செயல்புரியத் தூண்டும் சிந்தனை கருத்தியல்
உழைப்பு உண்மையானது.
விளைச்சல் உண்மையானது.
உழைப்பையும் விளைவையும் எண்ணி செயல்புரிவது பொருளியல்.
விளைச்சல் உண்மையானது.
உழைப்பையும் விளைவையும் எண்ணி செயல்புரிவது பொருளியல்.
அறிவினால் ஆணவத்தோடு செயல்படுவது கருத்தியல்.
அறிவினால் பிறர் துன்பம் துடைக்க ஓடுவது பொருளியல்.
இயற்கையை வழிபட்டு பயந்து நடப்பதும், இயற்கையை அழிக்க நினைப்பதும் கருத்தியல்.
இயற்கையை பாதுகாப்பது பொருளியல்.
இயற்கையை பாதுகாப்பது பொருளியல்.
அறிவியலால் இயற்கையை அழிக்கத் துடிப்பது கருத்தியல்.
அறிவியலால் இயற்கையைப் பாதுகாக்கத் துடிப்பது பொருளியல்.
கருத்தியல்படி செயல்படுவது பிராமணீயம்
பொருளியல் படி செயல்படுவது தமிழியம்,
பொருளியல் படி செயல்படுவது தமிழியம்,
கருத்தியல் கோட்பாடு பகவத்கீதை
பொருளியல் கோட்பாடு திருக்குறள்.
பொருளியல் கோட்பாடு திருக்குறள்.
ஏற்றத்தாழ்வு கொண்ட பிறப்புரிமையை கண்ணனால் கூட மாற்ற முடியாதது - பகவத்கீதை.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சியைப் போற்றுவதும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும்- திருக்குறள்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சியைப் போற்றுவதும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும்- திருக்குறள்.
நானே கடவுள் என்பது கருத்தியல்.
மேலான இயற்கையை போற்றி வழிபடுவது பொருளியல்.
மேலான இயற்கையை போற்றி வழிபடுவது பொருளியல்.
கருத்தியல் - நாத்திகம்
பொருளியல் - மெய்யியல்.
கருத்துகள்
கருத்துரையிடுக