அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி
அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளின் நிலை மிகவும் கவலைகிடமாக இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களின்நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. இதனால் இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கையோடு செயல்படுகிறது(?). தமிழகத்தில் தற்போது உள்ளதைப் போல தொடக்கப்பள்ளி கட்டமைப்பு (அருகாமைப் பள்ளி கட்டமைப்பு) வேறு எந்தமாநிலங்களிலும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். காமராசர் போன்ற அறம் வளர்த்த அரசியல் தலைவர்களாலும், நே.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையாலும் வளர்ந்த அரசுத் தொடக்கப்பள்ளிகளின் நிலைஇன்று அவலத்தின் உச்சத்தில் உள்...