இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போட்டித் தேர்வுகள் - வரமா? சாபமா?

படம்
போட்டித் தேர்வுகள் - வரமா? சாபமா? விவரங்கள் எழுத்தாளர்:  நா.​வெங்க​டேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2016 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுப்பு 4 (TNPSC Group IV என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியும்) பணிக்கான தேர்வுக​ளை நடத்த உள்ளது. விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. பத்தாம் வகுப்பு அளவில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அதில் கேள்விகள் கேட்கப்படும். அதிகபட்ச மதிப்பெண் பெறுபவருக்கு பணி வழங்கப்படும்.  அன்மைகாலமாக அரசுப் பணி மீதான மோகம் அதிகரித்து வருகிறது. எப்படியாவது அரசுத்துறை வேலைக்குச் சென்றுவிட்டால் நேரக்கணக்கில் குறைவான வேலையைப் பார்த்துவிட்டு (இதில் டீக்கடை மாஸ்டர், விவசாயி, பிட்டர், கொத்தனார், சிற்பி, தச்சுப் பணி போன்ற வேலைகளோடு ஒப்பிடுகையில் வேலை குறைவு) கைநிறைய சம்பளம் பெறலாம் என்ற நோக்கத்தில் பிள்ளைகளைப் பெற்றோர்கள் விரட்டத் தொடங்கியுள்ளனர். பணியிடத்தின் அளவைவிட பல பல மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்து குவிகிறது.  பத்தாம் வகுப்

அன்னிய மொழிக் காதல்! அல்லல்படும் கல்வி! பறிபோகும் பண்பாடு!

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31068-2016-06-21-19-51-38 அன்னிய மொழிக் காதல்! அல்லல்படும் கல்வி! பறிபோகும் பண்பாடு! விவரங்கள் எழுத்தாளர்:  நா.​வெங்க​டேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 21 ஜூன் 2016 Ø  " எங்கள் பள்ளியில் மாணவர்கள் தமிழில் பேச அனுமதியில்லை !" Ø  " எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல ! கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்!" Ø  " எங்கள் பள்ளியில் ஆங்கிலம், இந்தி, அரபி, தெலுங்கு போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகிறது!" Ø  "எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப்பயிற்சி வழங்கப்படுகிறது!" Ø  " எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சமற்கிருத பயிற்சியும் அளிக்கப்படுகிறது!" இவைகள் தனியார் பள்ளிகள் வெளியிடும் விளப்பர அறிக்கைகள். இப்படி அறிக்கையிடும் பள்ளிகள்தான் பெற்றோர்களால் கொண்டாடப்படுகிறது.  நம்மிடம் உள்ள அன்னிய மொழி மோகமே இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் வெளிப்படுத்துகிற

பேராவூரணி, இந்திராநகர் - இயற்கையாய் ஒரு சமத்துவபுரம்

படம்
பேராவூரணி ,  இந்திராநகர் - இயற்கையாய் ஒரு சமத்துவபுரம் பேராவூரணி வட்டம் ,  மாவடுகுறிச்சி ஊராட்சியில் உள்ளது இந்திரா நகர் என்னும் ஊர். சுமார்  350  க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் முற்பட்ட வகுப்பு ,  பிற்படுத்தப்பட்ட வகுப்பு ,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ,  தாழ்த்தப்பட்ட வகுப்பு என இருபதுக்கும் மேற்பட்ட சாதிகள் ,  சுமார் ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட இந்த ஊர் சமூக மாற்றத்திற்கான முன்னுதாரணம். பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்திரா நகர் என்னும் இந்த ஊர். பொதுவாக ஊரகப்பகுதி என்றாலே இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் சாதிய வன்மம் நிறைந்த ஊரகப் பகுதிகளைத்தான் செய்தி ஊடகங்கள் நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. இதே தஞ்சை மாவட்டத்தில்தான் திருநாள்கொண்டசேரி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை பொது வழியில் எடுத்துச்செல்லக்கூடாது என்று ஆதிக்க சாதிகளால் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்தது. இதற்கு மாறாக இதே தஞ்சை மாவட்டத்தில் சமூக நீதியைக் கடைபிடிக்கக் கூடிய ஊராகத் திகழ்கிற

விரிவடையும் வித்யாலய வியாபாரம்

விரிவடையும் வித்யாலய வியாபாரம் விவரங்கள் எழுத்தாளர்:  நா.​வெங்க​டேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 15 ஜூன் 2016 இன்றையத் தமிழகப் பெற்றோர்களை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களுல் தலையாயைச் சிக்கல், தங்கள் பிள்ளையை எந்த பள்ளியில் சேர்த்து விடுவது? என்பதாகத்தான் இருக்க முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அக்கறை அல்லது பயம் அல்லது இரண்டும் கலந்து பெற்றோர்களை வாட்டி வதைக்கும் சிக்கலாக இது ஒவ்வொரு ஆண்டும் தலைதூக்கி வருகிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம், உயர்தட்டு வர்க்கம் என்று பிள்ளைகளையும் - பள்ளிகளையும் சமூகம் பிரித்தே வைத்திருக்கிறது. இந்தியாவின் சிறப்பு மிக்க(?) வர்ணாசிரமப் பிரிவினையோடு இந்த வர்க்கப் பிரிவினையும் சேர்ந்து கொண்டு சமூக முடக்கத்தை வளர்த்து வருகிறது. பிள்ளைகளின் கல்வி குறித்த கவலையை விட, தங்கள் பிள்ளை எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கப் போகிறது என்பதில்தான் பெற்றோர்களின் பெருமை, கவுரவம் எல்லாம் அடங்கியிருக்கிறது. வருணாசிரமத்தில் பார்ப்பனரின் இடத்தைப் பிடிக்க எல்லா வர்ணத்தாரும் முயல்வ

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

பாலாபிசேகம் ஏன்? திருவிழாக் காலங்களில் கோவில்களில் பக்தர்களால் பால்குடம், பால் காவடி எடுக்கப்பட்டு கோவில் கருவறை மூலவர் சிலையில் பால் அபிசேகமாக ஊற்றப்படுகிறது . இன்றளவில் இப்படி பால் குடம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நேர்த்திக்கடன் என்ற பெயரில் இப்போது நடக்கும் இச்சடங்கின் உண்மைப் பொருளை சில பெரியவர்கள் கூறினார்கள். கோவிலில் சிலைகள் அமைக்கப்படும் போது பீடத்தில் மருந்துப் பொருட்களை வைத்து சிலைகளை அமைப்பர். அச்சிலைகளின் மேல் பால் போன்றவைகளைக் கொண்டு அபிசேகம் செய்வர். அது சிலையின் பீடத்தில் உள்ள மருந்துப் பொருட்களில் பட்டு கருவறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வடிகாலில் வடிந்து ஒழுகும். கோவில் சுற்றுப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் தொட்டியில் அபிசேகம் செய்யப்பட்ட பால் பொருட்களைப் பக்தர்கள் எடுத்து பருகுவர், அப்படிப் பருகுவதால் பல மருத்துவப் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இதுதான் சிலைகளில் அபிசேகம் செய்வதன் நோக்கம். இந்தப் பழக்கம் குறிஞ்சிப் பகுதியில் மலைகளில் உள்ள மூலிகைகளால் மருத்துவ குணம் கொண்டு பெருக்கெடுக்கும் அருவிகளைப் பார்த்

பழக்கமெல்லாம் பண்பாடாகிவிடுமா? - விபரீத வீர விளையாட்டு

பழக்கமெல்லாம் பண்பாடாகிவிடுமா? -  விபரீத வீர விளையாட்டு          தமிழர்கள் தங்களின் பண்பாடாக போற்றியது, அவர்களின் பொருள் செறிந்த (meaningful) வாழ்வை மட்டும்தான். பொருளற்ற சொற்களைக் கூட தமிழ் தன்னகத்தே வைத்திருக்காது. அறம் சார்ந்த தனது வாழ்வின் மூலம் உலகத்துக்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம் தமிழ் இனம்.   "அரிச்சந்திரா" நாடகம் மூலம் அர்த்தமற்ற சத்தியம் பரப்பப்பட்ட காலத்திற்கும் முன்பாகவே"பொய்மையும் வாய்மை.... நன்மை பயக்கும் எனின்" என்று அறம் போற்றிய "குறள்" கூறிய இனம் தமிழினம். புத்தருக்கு முன்பே காளையனையும் (ஆதிதீர்த்தங்கரர்), கபிலரையும் (ஆசீவக தத்துவ ஞானி) தந்த தத்துவ பூமி தமிழகம். தன்னை சிலுவையில் அரைந்த மக்களைப் பார்த்து பரிதாபப்பட்ட இயேசுநாதருக்கு முன்பே "இன்னா செய்தாருக்கும் இனியவே" செய்யும் சான்றாண்மை பகன்ற நாடு தமிழ்நாடு. ஆனால் வெற்றுச் சடங்குகளை தமிழர்களின் பண்பாடாக மாற்ற முற்படும் நிகழ்கால நிகழ்வுகள் வேதனையளிக்கிறது. ஏறு தழுவுதல் தமிழர்கள் கொண்டாடிய விளையாட்டாக இருந்திருக்கிறது. இவ்விளையாட்டின் மூலம் வீரத்தை க

குடிஅரசு-​தொகுப்பு

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51

எது பார்ப்பனியம்? -

விவரங்கள் எழுத்தாளர்:  நா.வெங்கடேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2016 ஆரியக் கொள்கையான பார்ப்பனியம் இம் மண்ணின் மக்களைக் கூறு போட்டது. நால்வர்ணம் என்ற பெயரில் மக்களைப் பிளவு படுத்தியது. ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக நீதிகள் உருவாக்கப்பட்டது. அந்த நீதியை காப்பாற்றாத வர்ணத்தவனுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. பெண்கள் பொருள்களாகப் பார்க்கப்பட்டனர். பெண்ணுரிமை மறுக்கப்பட்டது. ஒவ்வொரு வர்ணமும் பிறப்பின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்பட்டது. இவைகளே இன்றளவும் பார்ப்பனியத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு. அப்பார்ப்பனியம் சுமந்துவரும் பாவ மூட்டை. பார்ப்பனியம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம்மக்களால் எதிர்க்கப்பட்டு வரும் சித்தாந்தம். சமூக சீர்திருத்தவாதிகளால், சமூக நீதிக்காகப் போராடுகின்றவர்களால், பொதுவுடமைக்காரர்களால், பகுத்தறிவுவாதிகளால் தொடர்ந்து எதிர்ப்புகளைச் சந்தித்துவருவது பார்ப்பனியம். மேலும், பார்ப்பனியம் சமயச்சான்றோர்களான திருமூலர், வள்ளலார், நாராயணகுரு, அய்யாவைகுண்டர் போன்றவர்களாலும