பேராவூரணி அரசு கல்லூரிக்கு மேனாள் அமைச்சர் எம்.ஆர்.கோவேந்தன் பெயர் வைத்திட வலியுறுத்துவோம்.
பேராவூரணி அரசு கல்லூரிக்கு எம்.ஆர்.கோவேந்தன் பெயர் வைத்திட வலியுறுத்துவோம். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் மாண்புமிகு எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள். அவர் அமைச்சராக இருந்த காலத்திலேயே பேராவூரணி பகுதிக்கு கல்லூரி அமைக்கவேண்டும் என்ற பேராவா கொண்டிருந்தார். ஐயா அவர்கள் பிறந்த முடச்சிக்காடு பகுதியிலேயே பேராவூரணி அரசு கலைக்கல்லூரி தொடர்ந்து செயல்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேராவூரணி வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் பெயரை இக்கல்லூரிக்குச் சூட்டவேண்டும் என்று மெய்ச்சுடர் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் சீரிய முயற்சியால்தான் பேராவூரணி தொகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தொகுதி வளர்ச்சி கண்டது. பட்டுக்கோட்டை வட்டத்திலிருந்து பேராவூரணியைப் பிரித்து பேராவூரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை, விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம், தீயண