ஒருவன் கல்வி கற்க வேண்டும். குற்றம் இல்லாமல் கல்வி கற்க வேண்டும். கற்ற வண்ணம் செயல்பட வேண்டும்.
கற்றவை யாவும் சிறந்ததாகவும் உயர்வானதாகவும் இருக்கலாம், அதன் தத்துவங்கள் உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் செயலுக்கு வராமல் போனால் அவை மலட்டுச் சித்தாந்தங்கள் ஆகிவிடும்,
தேசத்தின் விடியலுக்கான தலையெழுத்தை எழுதிக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வு இருண்டு கிடக்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரிகளில் பெயரளவில் கௌரவப் பணி. இவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு என்பது கானல் நீராகவே கரைகிறது. தொகுப்பூதியம், 11 மாத கால ஒப்பந்த பணி, பெயர்தான் கௌரவப் பணி என்றாலும் பணியிடத்தில் நிரந்தரப் பணியாளர்களால் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது இதுதான் இவர்களின் இன்றைய நிலை. தமிழ்நாடு முழுவதும் 7,300 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள். பல கல்லூரிகளில் பெரும்பான்மையாக கற்பித்தல் பணியோடு ஒட்டுமொத்த கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். துறைத்தலைவர்களே இல்லாமல் பல கல்லூரிகளில் இவர்களைக் கொண்டே துறைகள் இயங்கி வருகிறது. இவர்கள்தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் பணி, நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக பணியாகவே தொடர்கிறது. தற்காலிக பணியே இங்கு நிரந்தரமாகிவிட்டது என்பது வேதனைக்குரியதாக உள்ளது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்த
திருமதி ஆஸ்மி. இவர் ஏழாம் வகுப்பும் மூன்றாம் வகுப்பும் படிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கு தாய். கணவர் அயல் நாட்டில் பணியாற்ற தனது மாமனார், மாமியார், குழந்தைகளுடன் வசித்து வரும் இல்லத்தரசி. இன்று இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர். அதைவிட இவரின் முதன்மையான அடையாளமாக மாறி இருப்பது புனல்வாசல் தன்னார்வ படிப்பு வட்டத்தின் மாணவி என்பது. பேராவூரணி அருகே உள்ளது புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் 1993இல் பள்ளி இறுதி ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றுகூடி 2021 செப்டம்பர் 12 -ல் தொடங்கியதுதான் புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம். பள்ளி வளாகத்திலேயே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய கூடம் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. 1993இல் இப்பள்ளியில் படித்து தற்பொழுது உலகெங்கும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வரும் நண்பர்கள் ஒவ்வொருவரும் படிப்பு வட்டத்தின் தேவைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர். போட்டித் தேர்வுகளுக்கான பாடப்புத்தகங்கள், வினாத்தாள்கள், தளவாடப் பொருட்கள், தேநீர் மற்றும் நொறுக்கு தீனிகள் என மாணவர்கள் மனநிற
பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மகளிர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. வளாகத்தில் அமைந்துள்ள பாரதி தையல் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் நித்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் பயிற்சி பள்ளி ஆசிரியர் உமா, பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, பேராசிரியர் பிரபா, பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி யின் பள்ளி மேலாண்மை குழு தலைவி சரண்யா முன்னிலை வகித்தனர். "மகளிர் நாள் விழாவில் மட்டும் பெண்ணுரிமை சிந்தனைகளை பேசிவிட்டு பிறகு விட்டுவிடாமல் வாழ்வில் எல்லா சூழல்களிலும் பெண்ணுரிமைக் குரலை பெண்களே உயர்த்திப் பிடிக்க வேண்டும். தந்தை பெரியாரின், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளை பெண்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும். தன்னை அடிமைப்படுத்தும் சமயச் சடங்குகளை, மதவாத சிந்தனைகளை பெண்கள் புறந்தள்ளி தங்களின் உரிமைகளைக் காத்துக் கொள்ள முன் வர வேண்டும்" என்று நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. திராவிட விடுதலைக்காக பொறுப்பாளர் சித.திருவேங்கடம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஆசிரியர் காஜாமுகைதீன், ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற பொறுப்பாளர் தா.கலைச்செல்வன், பாரதி ந.அமரேந்திரன், சமூக செயல்
கருத்துகள்
கருத்துரையிடுக