பள்ளிக்கு உரிய இட வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் - ஆண்டு விழாவில் மருத்துவர் பேச்சு
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வட்டாட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. 150 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளி போதிய இட வசதி இல்லாமல் உள்ளது. இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் துரை நீலகண்டன் கூறியதாவது, "முன்பெல்லாம் நாம் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி விளையாடுவோம். பள்ளிகள் விளையாட்டு மைதானங்களோடு செயல்படும். இப்பள்ளி மிகுந்த இட நெருக்கடியோடு செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களை விளையாட வாய்ப்பின்றி வளர்ப்பு பிராய்லர் கோழிகளை போல அடைத்து வைக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு அருகில் இட வசதி உள்ளது. அரசும் அதிகாரிகளும் மனம் வைத்தால் உரிய இட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்கெல்லாம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று எண்ணாமல் அரசு அதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு கல்லூரிக்கு அரசு புறம்போக்கு நிலத்தை வழங்கியது போல இந்த பள்ளிக்கு ஆலயத்துக்குச் சொந்தமான நிலத்தை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார். ஆண்டு விழா, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு பெரும் கொண்டாட்டமாய் நடைபெற்றது. ...