இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"உழைப்புக்கும் பண்புக்கும் கிடைத்த அங்கீகாரம்" தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருதாளரைப் பாராட்டிப் பேச்சு

படம்
பேராவூரணி, பெரியார் அம்பேத்கர் நூலகத்தில்  தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருது பெற்றுள்ள முடச்சிக்காடு முனைவர் அகிலன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.   முனைவர் அகிலன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரளாளராக பணியாற்றுகிறார்.  தமிழ்வழிக் கல்வி இயக்கம் முன்னெடுத்த இவ்விழாவில் திருக்குறள் பேரவை தலைவர் ஆறு.நீலகண்டன் தலைமை வகித்தார்.   பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் விருத்தாளரை வாழ்த்தி பேசினார். அவர் தனது வாழ்த்துறையில், "போற்றத்தக்க மனிதர் அகிலன்.  அவருக்கு விருது கிடைத்திருப்பது பொருத்தமானது.  படிக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அகிலனுக்கு அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்திட ஏற்பாடு செய்வோம்"என்றார். ஆனந்த விகடன் துணை நிர்வாக ஆசிரியர் எழுத்தாளர் வெ.நீலகண்டன், மருத்துவர் துரை.நீலகண்டன், குமுதம் டாட் காம் நேர்காணல் நெறியாளர் வளன்அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  சிறப்புரையாற்றிய வெ. நீலகண்டன் தனது உரையில், "அகிலன் முடச்சிக்காடு கிராமத்தில் படிக்கும்...

பள்ளியின் முகப்புப் படம், மாணவர்கள் குழுப் படம் மற்றும் பள்ளியின் பெயர் தாங்கி நாள்காட்டி வெளியீடு

படம்
காலம் மனிதர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. ஒவ்வொரு நாள்களும் சாதனை மனிதர்களின் வாழ்க்கையை வரலாறாக பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறது.   நாள்காட்டிகள் மாணவர்களை திட்டமிட வைக்கிறது. சாதனை நாட்களை குறித்து வைத்துக்கொண்டு குறிக்கோளுக்காக நகர்த்துகிறது.   நாள்காட்டி பார்க்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நம்மில் பலர் நேரம் காலம் அறியாதவர்களாக நாட்களைக் கடத்துகிறோம்.    பெரும்பாலான தனியார் பள்ளிகள் விளம்பர நோக்கங்களுக்காக தங்கள் பள்ளியின் பெயர் தாங்கி நாள்காட்டி களை வெளியிட்டு வருகின்றன.   தமிழர்களின் முதற் பொருளான காலத்தை அதன் அருமையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க புதிய யுத்தியை ஒரு பள்ளி கையாண்டு இருக்கிறது பேராவூரணி ஒன்றியம் , மாவடுகுறிச்சி ஊராட்சி ஆண்டிக்கச்சல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி.   பள்ளி சார்பில் ஒரு நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் பள்ளியின் முகப்பு தோற்றம், பள்ளி மாணவர்களின் குழு ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தலைப்பில் பள்ளியின் பெயர் அச்சிட...