வாழ்த்துகள் கலைஞர்களே!
பேராவூரணி பாரதி தையல் பயிலகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழை பயிற்றுநர் நித்யா வழங்கினார். தையல் கலைஞர்கள் தங்களின் நுட்பம் நிறைந்த கலையால் மக்களை மகிழ்விக்கும் பெரும் பணியை செய்கிறார்கள். தங்களின் அயராத உழைப்பால் விழா காலங்களில் சிறுவர்களையும் பெரியவர்களையும் கொண்டாட வைப்பவர்கள் இந்த தையல் கலைஞர்கள். ஆயத்த ஆடைகளின் வரவால் தனித்துவமாக அளவெடுத்து தைத்து போடும் பண்பாடு மறைந்து வந்தாலும் மீண்டும் தையல் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் பெருகி வருகிறது. இங்கு பயிற்சி பெற்று செல்லும் மாணவர்கள் தொடர்ந்து ஆடை வடிவமைப்பு நுட்பங்களை அறிந்து பணியாற்ற மெய்ச்சுடர் வாழ்த்துகிறது.