மாணவர் சேர்க்கைக்கு எந்த தனிப்பட்ட முயற்சியும் செய்வதில்லை! பள்ளியின் கல்விச் சூழல் மாணவர்களை ஈர்த்துள்ளது - பேராவூரணி வடகிழக்கு பள்ளியின் ஆண்டு விழாவில் வட்டார கல்வி அலுவலர் பேச்சு!
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் க.கலாராணி நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், "இந்தப் பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வரும் பள்ளியாகும். இங்குள்ள ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டால் பள்ளியின் கல்விச் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் எண்ணிக்கை இப்பள்ளியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்காக உங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கப் போவதில்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட வசதியை இப்பள்ளிக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். போதிய இட வசதி இருந்தால் உரிய கட்டிட வசதியை உடனடியாக செய்து தர தயாராக உள்ளோம். மேலும் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இன்னும் கூடுதலாக இரண்டு ஆசிரியர்களை விரைவில் நியமிக்க உள்ளோம். விரைவில் பள்ளி மாணவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களின் செயல்பாடுகளும் போற்றுதலுக்குரியது", என்றார். ஆசிரியர்களின் சிறப்பான திட்டமிடலோட