உறவுக்கு உதவியே ரோஜா செடி - நூல் விமர்சனம்
மேலூர் மு.வாசுகி அவர்களின் எழுத்தில் உருவான முதல் சிறுகதைத்தொகுப்பு "உறவுக்கு உதவிய ரோஜா சேடி". 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் எழுத்துலகில் பெண் படைப்பாளர்கள் எண்ணிக்கை இன்றும் ஒப்பிட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண் படைப்பாளர்கள் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களின் தன் எழுச்சியான படைப்பாக்கங்கள் சமூகத்திற்கு நல் விளைவுகளையும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பையும் தருகிறது. பென் படைப்பாளர்களை கொண்டாடுவதும் அவர்களின் படைப்புகளை தொடர்ந்து பரப்புவதும் சமூகத்தின் கடமையாகும். தனது நான்கு நூல்களை கவிதை நூல்களாக படைத்தளித்த கவிஞர் வாசுகி தனது ஐந்தாவது நூலை சிறுகதைத் தொகுப்பாகத் தந்திருக்கிறார். நம் அருகில் நடக்கும் நிகழ்வுகளை, பார்த்த சம்பவங்களை தனது சிறுகதைகளில் படிப்பினையாக மாற்றித் தந்திருக்கிறார். நூலின் தலைப்புக்கு உதவிய சிறுகதை சமூக மாற்றத்திற்கான விதையாக அமைகிறது. வணிகமாகிப்போன வாழ்வியல் சூழலில் உறவுகளை கூவி அழைக்கும் காலத்தில் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள பசுமைய