ஏனோ! அம்மா என் கவிதைகளை இரசிப்பதேயில்லை ! அபிநந்தினிமோகன்
வேலை முடிந்து வீடுதிரும்பிய கதிரவனை வழியனுப்ப மனமின்றி விழி நீர் சொரிந்தன நான்கு மணி மேகம். புழுக்கத்தை அதிகரித்தாலும் புழுதியில் பட்ட ஒரு துளி, புது வாசத்தோடு புத்துணர்வையும் தர, எழுத்துக்களை காதலிப்பவன் எவராகிலும் எழுதுகோலெடுக்காமல் இருந்திருக்கமாட்டார். எழுத்துக்களை காதலிப்பதில் மிக இளையவள் எனினும் கூட, எனக்குள்ளேயும் சில எண்ணச் சிதறல்கள். எனக்கெனவாய்த்த எண்ணச்சிதறல்களும், எழுது கோலுடனும், எதையோ எழுத முற்பட, காற்றில் மிதந்து வந்த காப்பியின் மணம் நாசி துளைத்தது. “ ஆ அம்மா வந்தாச்சா ” விளம்பரக் காட்சி ஒன்று மின்னிப்போக, ஆம் அம்மாதான்! ஆறிப்போயிடும் குடிச்சிட்டு எழுது என்ற அக்கறையான வார்த்தை “சர்க்கரையிட்ட காபியினும் சற்று அதிகமாய் இனிக்கிறதே” என கவிதையே எழுத தோன்ற, ஆவி பறக்கும் காப்பி, ஆவலை அதிகப்படுத்த, என்னை விட வேகமாய் பறந்தன, என் கையிலிருந்த ஏடுகள். ‘அச்சச்சோ’ பறக்குதே என அம்மா அத்தனையும் எடுத்துக் கொண்டே, நான் அடுக்கி வைக்கிறேன் நீ குடி என அத்தனையும் வாசித்துப் பார்த்தாள். அழகா எழுதியிருக்கயே, என் தங்கமே! அத்தனை வரியும் அற்புதமென ஆசையாய் அவள் கொஞ்ச, குளிர்ந்துபோனது என் ஆவி மட