இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்த்துச் சொல்வோம்...

படம்
வாழ்த்துச் சொல்வோம்... பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யின் முகப்புச் சுற்றுச்சுவரை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலை துறையினர் இடித்து விட்டனர். இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாத சூழலில் பள்ளி செயல்பட்டு வந்தது. வெளிநபர்கள் பள்ளியின் கழிவறைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர். நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளி என்பதால் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களும் மாணவர்களும் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருநாள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வகுப்பு நேரத்தில் கழிவறை செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்து சாலையை பார்த்து இருக்கிறார். சாலையில் அந்த மாணவியின் உறவினர் யாரோ ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்து, விவரம் அறியா அந்தக் குழந்தை அந்த உறவினரை பார்த்துக்கொண்டே பெரியார் சிலை வரை சென்று விட்டார். ஆசிரியர்கள் உடனடியாக கவனித்து அந்த மாணவியை மீட்டு வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் இந்த செய்தியை கேள்விப்பட்ட செந்தில் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் க.நீலகண்டன் அவர்கள் பதறிப்போய் உடனடியாக பள்ளிக்கு ஒரு தற்காலிக கம்பி வே

பேராவூரணி பகுதிக்கு போக்குவரத்து வசதி செய்துதரக் கோரிக்கை

படம்
  பேராவூரணி பகுதிக்கு போக்குவரத்து வசதி செய்துதரக் கோரிக்கை மக்களைத் தேடி முதல்வர் - பேராவூரணி சிறப்பு முகாமில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:- பேராவூரணி வட்டார பொதுமக்கள் உரிய போக்குவரத்து வசதியின்றி இரவு நேரங்களில், வெளியூரிலிருந்து வரவும் வெளியூர்களுக்குச் செல்லவும் முடியாத நிலை உள்ளது. கிராமப்புற பகுதிகளுக்கு பகல் நேரத்திலும் போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதன்காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, மதுரை போன்ற நகரங்களுக்கு மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தனியார் வாகனங்களை அதிக வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. பலர் வசதியின்மை காரணமாக உயிரழக்கும் நிலையும் ஏற்படுகிறது. வெளியூருக்கு பணிக்குச் செல்பவர்கள் உரிய நேரத்தில் பணிக்குச் செல்லமுடியவில்லை, தொழில் காரணமாக வெளியூருக்கு பயனிப்பவர்கள் உரிய நேரத்தி