பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்
பொலிவிழந்து வரும் மண் பானை தொழில் மனித நாகரிகத்தின் அடையாளம் உலகின் மூத்த தொழில் மண் பானை செய்யும் தொழில் தற்பொழுது நலிந்து வருகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை பண்பாட்டு அடையாளமாக மண்பாண்டங்கள் இருந்து வருகிறது. கீழடி ஆய்வின் அடையாளமாக தமிழ் மொழியின் தொன்மத்தின் தரவுகளாக இன்றும் நம்மிடம் இருப்பது மண் பானை ஓடுகள்தான். சிந்து முதல் குமரி வரை தமிழர்களின் நாகரீக அடையாளமாக மண்பாண்டத் தொழில் இருந்து வருகிறது. தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா மண் பானைகள் இல்லாமல் சிறக்காது. வேளாண் குடிகள் பொங்கல் வைக்கும் விழாவை மண்பானைகளை கொண்டே வைப்பார்கள். சாதாரண புழங்கு பொருட்களாக இருந்த மண்பானைகள் பொங்கல் விழாவின் அடையாளமாக மாறிப் போனது. காலப்போக்கில் அதுவும் மறைந்து வெவ்வேறு உலோகப் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கத்தால் மண்பானைகளில் புழக்கம் குறைந்து வருகிறது. மண் பானைகளின் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை சமகால தலைமுறை தெரிந்து வைத்திருந்தாலும் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில் பொங்கல் விழாவை மையப்படுத்தி நடைபெறும் சொற்பமான பானை செய்யும் தொழிலும் இந்த ஆண்டு மிகவும