பண்பாட்டு விழாவைப் பாதுகாப்போம்...
பண்பாட்டு விழாவைப் பாதுகாப்போம்... மஞ்சள் கொத்து , கரும்பு , பச்சரிசி , வெல்லம் , நெய் , புதிய மண் பானை , விறகு , மாவிலை , குருத்தோலை தோரணம் இவைகள்தான் பொங்கல் விழாவுக்கான குறைந்தபட்ச தேவை. இந்தப் பொருட்கள் தமிழகத்தில் அனைத்து ஊரகப்பகுதிகளிலும் மிகக் குறைந்த விலைக்கோ அல்லது விலையில்லாமலோ கிடைத்துவிடக்கூடியதாகும். இயற்கையையும் , முன்னோர்களையும் , கால்நடைகளையும் போற்றும் விழாவாக பொங்கல் விழா மிகுந்த கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி விழா என்று கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா வேறுபட்டது. இவ்விழா வெறும் அறுவடைத் திருவிழா மட்டுமல்ல அறுவடைக்குக் காரணமான இயற்கையை , இயற்கைகைக் காத்து நமக்களித்த முன்னோர்களை நன்றிப் பெருக்கோடு நினைவு கூறும் விழா. தமிழர்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை உலகுக்குப் பறைசாற்றும் விழா. உழைப்பும் , நன்றி உணர்வும் தமிழர்களின் இரு கண்கள். இதை உணர்த்தும் விழாதான் பொங்கல் பெருவிழா. முதல்நாள் விழா போக்கிப் பொங்கல் , வீட்டை தூய்மைப் படுத்தி பொங்கல் விழாவுக்கு தயாராகும் விழா