இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரச பயங்கரவாதம்

படம்
அரச பயங்கரவாதம் பந்நெடுங்காலமாகவே பாட்டாளிகளும் , உழைப்பாளிகளும் நிலப்பிரபுக்களாலும் , அரசாங்கத்தாலும் சுரண்டப்பட்டும் , ஒடுக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள்.  உரிமைகள் மறுக்கப்பட்டடு , உழைப்பு சுரண்டப்பட்டு , கொத்தடிமைகளாக உழைப்பவர்களை கருதும் மனநிலை , அடிப்படை நிலையிலிருந்து அரசுக் கட்டில் வரை தொடர்கிறது. அதற்கு தற்கால சாட்சிதான் ஆந்திராவில் இருபதுபேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.   உழைக்கும் அடித்தட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நிலமிழந்து , சுயம் இழந்து , மொழி இழந்து அந்நியப் பகுதியில் அடிமைகளாக வாழ அடிப்படை காரணமே மக்களிடம் காணப்படும் ஆதிக்க சிந்தனைதான்.  சமூகத்தால் அருகாமையில் இருக்கும் உழைப்பாளிகள் , விவசாயக்கூலிகள் , தொழிலாளர்கள் மதிப்பளிக்கப்படாதபோது அவர்கள் பிழைக்கப் போன இடத்திலும் இதே கொடுமைகளுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுவும் அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்ற பயங்கரவாதம்தான் ஆந்திராவில் நடந்த 20 கூலித்தொழிலாளர்களின் கொலை.   ஆந்திராவோ , தமிழ்நாடோ , இந்தியாவோ யாருக்காக அரசு இயந்திரம் செயல்படுகிறது

மக்கள் மருத்துவர் வீ.வீரபாண்டியன்.

படம்
பேராவூரணி சேது சாலையில் அமைந்துள்ளது வினோத் டவர். இக்கட்டிடத்தில் மருத்துவச் சேவை செய்து வருகிறார் மருத்துவர் வீ.வீரபாண்டியன்.  அரசுப் பணி ஓய்வுக்குப் பின் சமூக அக்கரையோடு சிறப்பான மருத்துவச் சேவை செய்துவரும் இவர், வெள்ளிக் கிழமைகளில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார். தனது தனித்துவமான பணி அனுபவத்தால் நோயாளியின் மன உணர்வை உணர்ந்து ஆலோசனை வழங்குவதில் வல்லவர். "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்   வாய்நாடி வாய்ப்பச் செயல்"   என்ற திருக்குறள் நெறியின் படி மருத்துவம் செய்து வருகிறார். பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை முற்றிலுமாக புறக்கணிக்கும் போக்கு இருக்கும். ஆனால் இவரோ நமது பண்பாட்டு தமிழ் மருத்துவ அறிவையும் உள்ளடக்கி ஆலோசனை வழங்கி வருபவர். நோயாளியின் பதட்டத்தைத் தனித்து நோய் குறித்து அவர்களிடம் பேசி, மருத்துவருக்கும், நோயாளிக்குமான இருக்கத்தைக் குறைத்து நோயைப் பற்றிய பயத்தை நீக்கி மனவியல் ஆலோசனை வழங்குவதில் தனிச் சிறப்பு மிக்கவர். வியாபார நோக்கத்தோடு அல்லாமல் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், அ