இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எளியவர்களின் குலதெய்வக் கோயிலாய் புதுப்பொலிவு பெற்ற பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம்.

வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து பாருங்க!  புதுப்பொலிவு பெற்றது பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம். ------------------ "குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்  சுற்றமாச் சுற்றும் உலகு" சுற்றம் சூழ்ந்திட குற்றமற்றவர்களாய் வாழும் வகை சொல்லும் திருக்குறள் கூறி வட்டாட்சியர் அலுவலக முதன்மை கட்டிடத்தில் முகம் காட்டி நம்மை வரவேற்கிறார் வள்ளுவப் பெருந்தகை.   முதன்மை கட்டிடத்திற்குள் நுழைந்ததும் வள்ளுவர் வாசகப் பூங்கா நல்வரவு சொல்கிறது. இங்கு பல்வேறு தேவைகளுக்காக அலுவலகம் வருபவர்கள் அமர்ந்து நாளிதழ்களை வாசித்துக் ​கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தின் முதல் தளத்திற்கு செல்லும் வாயிலில் தாகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக அ​மைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பான் பார்வைக்காக இல்லாமல், உண்மையிலேயே இயங்குகிறது... அருகிலேயே உள்ள தகவல் பலகை புதுப்புது செய்திகளை அறிவிக்கிறது... எந்தப் பணியை எந்த இருக்கையில் உள்ள அலுவலரை சந்தித்து பெற வேண்டும் என்று வழிகாட்டுகிறது ஒவ்வொரு இருக்கைக்கு முன்பும் உள்ள அறிவிப்பு பலகை... கட்டிடத்தின் எந்த மூலையிலும் குப்பைகள் இல்லை...  சுவர்களில்   பூச்சுகள் உதிரவில்​​லை