இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் வழிக் கல்வி இயக்கம் பொறுப்பாளர்கள் நியமனம்.

படம்
  தமிழ் வழிக் கல்வி இயக்கம் பொறுப்பாளர்கள் நியமனம். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. அ.சி. சின்னப்பத்தமிழர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்கள் தலைவராக அ.சி.சின்னப்பத்தமிழர், செயலாளராக வை.தேனரசன், பொருளாளராக த.மணிசேகரன், இணைத் தலைவராக பெ.சிலம்பூர்க் கிழான், துணைத் தலைவராக த.செந்தமிழ் வேந்தன், இணைச் செயலாளராக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், துணைச் செயலாளராக மெய்யன்பன், கொள்கை பரப்புச் செயலாளராக இரா.அரங்க நாடன், சட்டக் கருத்தாளராக கு.ஞ.பகத்சிங் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களாக நற்றமிழர், செல்வம், பஞ்சு, தவமணி, வி.திருமால், செ.சரவணன், கண்ணதாசன், தமிழ்த் தென்றல், பேராவூரணி த.பழனிவேல், சேவியர், ந.அரத்தினம், தங்கச்சாமி, பொன்.தங்கராசு, குமரேசன், செருவை மு.ரெ. முத்து, பெ.குணசீலன் , சாரங்கபாணி, மீனாட்சிசுந்தரம், செ.பொழிலன் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்வில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டி நடைமுறைப் படுத்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி