இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

meichuder qr code

படம்
 

தமிழ் மணம் பரப்பும் தாழம்பூ

படம்
  தமிழ் மணம் பரப்பும் தாழம்பூ புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், சுப்பிரமணியபுரம் அஞ்சல், விஜயபுரம் கிராமத்திலிருந்து தமிழ் மணம் பரப்பி வருகிறது தாழம்பூ என்கிற பல்சுவை இலக்கிய இருமாத இதழ். 383 இதழ்களை கடந்து இரண்டு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களின் இதயம் தொட்டு, இன்றும் தொடர்கிறது. இலக்கிய இதழ் நடத்த வேண்டும் என்ற ஆசையும் இலக்கிய ஆர்வமும் கொண்ட பலர் தொடங்கி துவண்டுபோன இதழியல் துறையில், இந்த இதழ் பல இடர்களைத்தாண்டி இன்றும் கையெழுத்து இதழாக இலக்கியம் பேசி வருகிறது. 1977 இல் தனது பள்ளி இறுதியாண்டில் தொடங்கிய இதழ் நடத்தும் பணியை தனது 62 ஆவது அகவையிலும் தொய்வின்றி தொடர்ந்து வருகிறார் இதழின் ஆசிரியர் தாழம்பூ கோவிந்தராஜன். பாரம்பரிய சித்தமருத்துவரான இவர் இலக்கய ஆர்வத்துடன் தொடர்ந்து நடத்திவரும் தாழம்பூ சிற்றிதழை அறியாத இதழாளர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பில்லை. படியெடுக்கும் வசதி இல்லாத தொடக்க காலத்தில் கார்பன் தாள் கொண்டே இதழ் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார் ஐயா கோவிந்தராஜன். தற்போதும் மூலப்படியை கையெழுத்தில் தயாரித்துவிட்டு படி எடுத்து இதழை தயாரித்து வருகிறார்