இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உரிமைகளோடு வாழ்வதே விடுதலை!

படம்
  உரிமைகளோடு வாழ்வதே விடுதலை! இங்கிலாந்து அரசு நம்மை ஆட்சி செய்த காலகட்டத்தை அடிமை இந்தியா என்று சொல்கிறோம். ஏனென்றால் இங்கிலாந்து அரசு நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, நம்மை நாமே ஆட்சி செய்து கொள்வதற்கான உரிமை, நமக்கான சட்டங்களை நாமே இயற்றிக் கொள்வதற்கான உரிமைகளை நமக்கு வழங்கவில்லை. இந்த உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களை இங்கிலாந்து அரசு ஒடுக்கியது. நமது வளங்களை அவர்கள் விருப்பத்திற்கு கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக சாலைகளை விரிவுபடுத்தினார்கள். இந்தியா முழுவதும் போக்குவரத்தை இணைப்பதற்காக இரயிவே துறையை உருவாக்கினார்கள். கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக சட்டங்களை இயற்றி அந்த சட்டத்தின்படி ஆட்சி நடப்பதாகக் கூறிக்கொண்டார்கள். இந்தியாவிற்குள் மாகாணங்களை உருவாக்கி அந்தப் பகுதிக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அமைத்தார்கள். அவர்கள் தன்னிச்சையாக இயங்க இயலாத வகையில் அவர்களை கட்டுப்படுத்த ஆளுநர்களை நியமனம் செய்தனர். அடிமை இந்தியாவில் இங்கிலாந்து அரசாங்கம் செய்த கொடுமைகளை தற்போது மாநில அரசுகள் அனுபவித்து வருகிறதா இல்லையா? நம் நாட்டு வளங்க