வறியார்க்கொன்று ஈவதே ஈகை!
வறியார்க்கொன்று ஈவதே ஈகை! --------------- பேராவூரணி பேருந்து நிலையத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கி வருகிறார் பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் வன்மீகநாதன். ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. பசி எல்லா உயிர்க்கும் பொதுவானது. அதை அறிவதே ஒத்ததறியும் உயர் பண்பாகும் மற்றவர்களின் பசிப்பிணியை போக்குவதை மிக உயர்ந்த அறமாக திருக்குறள் போற்றுகிறது. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. வறியவர்களுக்கு பசிப் பிணியை நீக்கும் பெரும் பணியைச் செய்தவர்கள் உலகைப் படைத்தவனின் கருவூலத்தில் சேமிக்கிறார்கள் என்கிறார் வள்ளுவர். ஏழைகளுக்கு உணவளிப்பது கடவுளுக்கு கடன் கொடுப்பதற்கு சமம் என்கிறது திருவிவிலியம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமகனார் வகுத்தளித்த அறம் பசிப்பிணி போக்குவது. சமயங்கள் கடந்து சான்றோர்கள் போற்றும் ஒப்பற்ற பணி சாப்பிடக் கொடுப்பது. பெரும் தனவந்தர்களும் அரசும் செய்யவேண்டிய அரும்பெரும் பணியை கங்க