இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டையில் போராட்டம்

படம்
தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்காதே! புதுக்கோட்டையில் போராட்டம்! ---------------- தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு இருக்கிறது. குரூப் 2 தேர்வில் நூறு வினாக்கள் தமிழிலிருந்து கேட்கப்பட்டு வந்தது.  இந்த முறையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றியிருக்கிறது. இதனால் தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் பணிக்கு வரும் சூழல் உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் நீக்கப்பட கூடாது! தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும்! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இளம் பெண்கள் கலந்துகொண்டு; தமிழர்களுக்கே வேலை கொடு! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கொடு! என்று முழக்கமிட்டனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி மத்தியில்