இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளின் நிலை மிகவும் கவலைகிடமாக இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களின்நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. இதனால் இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கையோடு செயல்படுகிறது(?). தமிழகத்தில் தற்போது உள்ளதைப் போல தொடக்கப்பள்ளி கட்டமைப்பு (அருகாமைப் பள்ளி கட்டமைப்பு) வேறு எந்தமாநிலங்களிலும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். காமராசர் போன்ற அறம் வளர்த்த அரசியல் தலைவர்களாலும், நே.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையாலும் வளர்ந்த அரசுத் தொடக்கப்பள்ளிகளின் நிலைஇன்று அவலத்தின் உச்சத்தில் உள்ளது. தனியார் பள்ளிகளின் அசுரத்தனமாக வளர்ச்சியாலும், பெற்றோர்களின் தனியார்பள்ளி மோகத்தினாலும் வரக்கூடிய கல்வியாண்டுகளில் இன்னும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் சூழல்தான்தற்போதுள்ள நிலைமை. இதனால் மாணவர் எண்ணிக்கையற்ற பள்ளிகளுக்கு மூடுவிழா(!) நடத்த வேண்டிய நிலைதான்தொடரக்கூடும்.அரசுத் தொடக

கருத்தியல்.... பொருளியல்.....

கருத்தியல்.... பொருளியல்..... ------------------------------------------------------------- கற்பனையான விதிகளை அனுமானித்து நம்பி நடப்பது கருத்தியல் அனுபவ விதிகளை நம்பி நடப்பது பொருளியல் செயல்கள் நாடகமே... நாம் நாடக நடிகர்கள்.... ஒவ்வொரு விளைவுக்குமான காரணம் நம் கையில் இல்லை என நம்புவது கருத்தியல். ஒவ்வொரு செயலுக்கும் உரிய விளைவுகள் இருக்கும் என நம்புவது பொருளியல். கடவுள், வர்ணம், சாதி அடிப்படையில் செயல்புரியத் தூண்டும் சிந்தனை கருத்தியல் உழைப்பு உண்மையானது. விளைச்சல் உண்மையானது. உழைப்பையும் விளைவையும் எண்ணி செயல்புரிவது பொருளியல். அறிவினால் ஆணவத்தோடு செயல்படுவது கருத்தியல். அறிவினால் பிறர் துன்பம் துடைக்க ஓடுவது பொருளியல். இயற்கையை வழிபட்டு பயந்து நடப்பதும், இயற்கையை அழிக்க நினைப்பதும் கருத்தியல். இயற்கையை பாதுகாப்பது பொருளியல். அறிவியலால் இயற்கையை அழிக்கத் துடிப்பது கருத்தியல். அறிவியலால் இயற்கையைப் பாதுகாக்கத் துடிப்பது பொருளியல். கருத்தியல்படி செயல்படுவது பிராமணீயம் பொருளியல் படி செயல்படுவது தமிழியம், கருத்தியல் கோட்பாடு பகவத்க