இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போட்டித் தேர்வுகள் - வரமா? சாபமா?

படம்
போட்டித் தேர்வுகள் - வரமா? சாபமா? விவரங்கள் எழுத்தாளர்:  நா.​வெங்க​டேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2016 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுப்பு 4 (TNPSC Group IV என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியும்) பணிக்கான தேர்வுக​ளை நடத்த உள்ளது. விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. பத்தாம் வகுப்பு அளவில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அதில் கேள்விகள் கேட்கப்படும். அதிகபட்ச மதிப்பெண் பெறுபவருக்கு பணி வழங்கப்படும்.  அன்மைகாலமாக அரசுப் பணி மீதான மோகம் அதிகரித்து வருகிறது. எப்படியாவது அரசுத்துறை வேலைக்குச் சென்றுவிட்டால் நேரக்கணக்கில் குறைவான வேலையைப் பார்த்துவிட்டு (இதில் டீக்கடை மாஸ்டர், விவசாயி, பிட்டர், கொத்தனார், சிற்பி, தச்சுப் பணி போன்ற வேலைகளோடு ஒப்பிடுகையில் வேலை குறைவு) கைநிறைய சம்பளம் பெறலாம் என்ற நோக்கத்தில் பிள்ளைகளைப் பெற்றோர்கள் விரட்டத் தொடங்கியுள்ளனர். பணியிடத்தின் அளவைவிட பல பல மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்து குவிகிறது.  பத்தாம் வகுப்