அன்னிய மொழிக் காதல்! அல்லல்படும் கல்வி! பறிபோகும் பண்பாடு!
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31068-2016-06-21-19-51-38 அன்னிய மொழிக் காதல்! அல்லல்படும் கல்வி! பறிபோகும் பண்பாடு! விவரங்கள் எழுத்தாளர்: நா.வெங்கடேசன் தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம் பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 21 ஜூன் 2016 Ø " எங்கள் பள்ளியில் மாணவர்கள் தமிழில் பேச அனுமதியில்லை !" Ø " எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல ! கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்!" Ø " எங்கள் பள்ளியில் ஆங்கிலம், இந்தி, அரபி, தெலுங்கு போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகிறது!" Ø "எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப்பயிற்சி வழங்கப்படுகிறது!" Ø " எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சமற்கிருத பயிற்சியும் அளிக்கப்படுகிறது!" இவைகள் தனியார் பள்ளிகள் வெளியிடும் விளப்பர அறிக்கைகள். இப்படி அறிக்கையிடும் பள்ளிகள்தான் பெற்றோர்களால் கொண்டாடப்படுகிறது. நம்மிடம் உள்ள அன்னிய மொழி மோகமே இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் வெளிப்படுத்துகிற