இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

பாலாபிசேகம் ஏன்? திருவிழாக் காலங்களில் கோவில்களில் பக்தர்களால் பால்குடம், பால் காவடி எடுக்கப்பட்டு கோவில் கருவறை மூலவர் சிலையில் பால் அபிசேகமாக ஊற்றப்படுகிறது . இன்றளவில் இப்படி பால் குடம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நேர்த்திக்கடன் என்ற பெயரில் இப்போது நடக்கும் இச்சடங்கின் உண்மைப் பொருளை சில பெரியவர்கள் கூறினார்கள். கோவிலில் சிலைகள் அமைக்கப்படும் போது பீடத்தில் மருந்துப் பொருட்களை வைத்து சிலைகளை அமைப்பர். அச்சிலைகளின் மேல் பால் போன்றவைகளைக் கொண்டு அபிசேகம் செய்வர். அது சிலையின் பீடத்தில் உள்ள மருந்துப் பொருட்களில் பட்டு கருவறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வடிகாலில் வடிந்து ஒழுகும். கோவில் சுற்றுப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் தொட்டியில் அபிசேகம் செய்யப்பட்ட பால் பொருட்களைப் பக்தர்கள் எடுத்து பருகுவர், அப்படிப் பருகுவதால் பல மருத்துவப் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இதுதான் சிலைகளில் அபிசேகம் செய்வதன் நோக்கம். இந்தப் பழக்கம் குறிஞ்சிப் பகுதியில் மலைகளில் உள்ள மூலிகைகளால் மருத்துவ குணம் கொண்டு பெருக்கெடுக்கும் அருவிகளைப் பார்த்