இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பணி வாய்ப்புகள் இல்லாத பாடங்களுக்கு பி.எட்.

பணி வாய்ப்புகள் இல்லாத பாடங்க ளுக்கும்  பி.எட். ஆசிரியர்கள் பணிவாய்ப்பில்லாத , பள்ளிகளில் நடத்தப்படாத பாடங்களுக்கெல்லாம் பி.எட். படிக்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றன தமிழகப் பல்கலைக்கழகங்கள்.   பொதுவாக பள்ளிகளில் தேவைப்படும் பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்களை உருவாக்கித் தரும் வேலையை , பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் , செய்து வந்தன. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பட்டம் வழங்கும் பொறுப்பைத் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதோடு தமிழக பல்கலைக்கழகங்களும் பி.எட். , பட்டப் படிப்பினை வழங்கி வருகின்றன.                 இப்பல்கலைக்கழகங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களே தேவைப்படாத பாடங்களுக்கும் பி.எட். படிப்பை வழங்கிவருவதால் , இப்படிப்பிற்குப்பின் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.                   இதுவரை வணிகவியல் , பொருளாதாரம் , அரசியல் போன்ற பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் பி.எட் படிக்க முடியாது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு வரை இப்பாடங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படு