சீரழியும் பள்ளிகள்! சிறக்குமா எதிர்காலம்!
"சிங்கிட மணி சிங்கிட மணி", "ஏக் தோ தீன் சார் சொல்லித் தாரேன்", "சித்தாடை கட்டிக்கிட்டு", "தங்கமான ஊதாரி" இந்தப்பாடல்கள்களுக்கு திரைக்கலைஞர்கள்(?) போலவே அச்சு அசலாக நடனமாடும் மேடைகளை தற்போது தொடர்ந்து பார்க்க முடிகிறது. தெருக்கூத்து மேடையோ, கோவில் விழாக்களின் நள்ளிரவு நடன மேடையோ அல்ல. அத்தனையும் பள்ளி மேடைகள். பள்ளிச் சிறுவர்களை ஆபாச வரிகள் அடங்கியப் பாடல்களுக்கு நடனமாடவிட்டு வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது நமது ஆசிரியச் சமூகம். ஒருபக்கம் அரசுப்பள்ளிகளெல்லாம் மூடக்கூடிய அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அரசுத் துறையை இழுத்து மூட அரசும், ஆட்சியாளர்களும் கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. இப்போதே பல அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளுக்க