இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறள்

படம்
திருக்குறள் கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.                          401 ஒருவன் கல்வி கற்க வேண்டும். குற்றம் இல்லாமல் கல்வி கற்க வேண்டும். கற்ற வண்ணம் செயல்பட வேண்டும். கற்றவை யாவும் சிறந்ததாகவும் உயர்வானதாகவும் இருக்கலாம், அதன் தத்துவங்கள் உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் செயலுக்கு வராமல் போனால் அவை மலட்டுச் சித்தாந்தங்கள் ஆகிவிடும்,

அம்மா

படம்
அம்மா கருவினில் உருவான காலம் முதலே- தெருவினில் நடக்கும் போதும் திண்ணையில் படுக்கும்போது, நமக்கு ஒருகுறையும் நடந்திடக் கூடாதென்று அடிமேல் அடிவைத்து, அதிராமல் நடைநடந்து வாய்க்குச் சுவையாய் எதையும் தேடாமல், மருந்தாய்உணவை உணவைவே மருந்தாயும், மறக்காமல்வேளாவேளாக்கும் பிறக்கப்போகும் நமக்காக பத்தியமாய் இருந்து நித்தமும் அருந்தி குனிந்து நிமிராமலும் குப்புறப் படுக்காமலும் எப்பொழுதும் நமக்கான நினைவினில் கரைந்து கனவினில் மிதந்து முந்நூறு நாட்களை எண்ணி எண்ணி அத்தனை இரவுகளில் துயில் மறந்த கதிரவனாய் தூங்காமல் விழித்திருந்து துக்கப்படுதல் கூட தக்கதல்லவென்று, துன்பத்தையும் இன்பமாய் எண்ணி, வலியெடுத்த நொடிமுதலாய் அழுது துடித்தே உயிர் வலித்து மறுபிறவியாய் உயிர்த்தெழுந்து பெருமைமிகு தாயாகி ஈன்று புறம்தந்து- தோன்றும் பசிபோக்க ஓடும் பேருந்தில் கூட மூடும் வகை தெரியாமல், களவு செய்யும் பலரின் பார்வைக்கும் வெட்கப்படாமல் வெகுளியாய், உட்பக்கமாய் ஒடுங்கி முந்தானையால் மூடி முலைப்பால் தந்து, பொத்திப் பொத்தி வளர்த்து, எத்தனை வயதானாலும் பெத்ததனால் பித்தாகி