முது பெரும் தொழிலாளர் வர்க்க போராளியும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவருமாகிய தோழர் ஏ.எம். கோபு வின் உடல் மறைவு
முதுபெரும் விடுதலை போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பெரும் தலைவர் தோழர் ஏ.எம்.கோபு கடந்த 13.09.2012 இல் காலமானார். ஆரியர் வருகையாலும், அன்னியர் படையெடுப்புகளாலும் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியத் திருநாட்டில் அடிமைத்தனத்தில் பழகிப்போயிருந்த மக்களுக்கு விடுதலை உணர்வை தட்டியெழுப்பி அவர்களின் உயர்வுக்காக பாடுபட்டு தன் வாழ்வையே பொதுவாழ்வுக்காக ஈகமாய் வழங்கிய தலைவர்களுள் ஒருவர் தோழர் ஏ.எம். கோபு. இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருநீலக்குடி கிராமத்தில் மாணிக்கம் - கமலம் இணையர்களின் மகனாய் பிறந்தவர். தனது 8 ஆம் வகுப்பு பள்ளிப் படிப்பின் காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தவர். அதனால் ஒன்பதாம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்து படிக்க திருப்பனந்தாள் மடத்தின் தலையீட்டினால் அப்பகுதி பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டவர். பின்னர் தனது பள்ளிப் படிப்பை நாகையில் தொடர்ந்த கோபு, அங்கும் ஸ்டீல் ரோலிங் மில் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கல்லூரிப் படிப்பை புதுகை மன்னர் கல்லூரியில் தொடர்ந்த போது அங்கு டி.வி.எஸ் போராட்டத்திலும் ஈ