உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் பேராவூரணி ஒன்றிய பள்ளிகளின் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது
பேராவூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேராவூரணி வடகிழக்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாட்டாணிகோட்டை வடக்கு ஆகிய பள்ளிகளில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளிகளின் தேர்வு செய்யப்பெற்ற தலா 25 மாணவர்களுக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பெற்றது. இந்த இயக்கம் சார்பில் பள்ளிகளில் தேர்வு செய்யப்பெறும் 25 மாணவர்களைக் கொண்டு பகிரி குழுக்கள் உருவாக்கப்பட்டு திருக்குறள் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் வகையில் தயார் செய்து மாணவர்களை தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 15000 பரிசுத்தொகை பெற்றிட ஊக்கப்படுத்துகிறார்கள். அறம் சார்ந்த பொருள் வளமிக்க நல்லிணக்க சமுதாயத்தை கட்டமைக்கும் நோக்கத்தோடு பள்ளிகள் தோறும் திருக்குறள் புத்தகங்களை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. பேராவூரணி ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் திருக்குறள் பயிற்றுநர்கள் தஞ்சாவூர் அ.கோபிசிங் மற்றும் ஆனந்தி சரவணன் ஆகியோர் மாணவர்களுக்குப் புத்தகங்...