இனி தப்ப முடியாது மோடி அரசே…
இனி தப்ப முடியாது மோடி அரசே… நவம்பர் 30, 2020 ஆ று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டுதான் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, தடைகளைத் தகர்த்து நுழைந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவ்வளவு எளிதில் அவர்களை தடுத்து நிறுத்திவிடவோ, கைது செய்து எங்கேனும் அடைத்துவிடவோ, புதிய வகை அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கிவிடவோ மோடி அரசால் இனி முடியாது. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் – விவசாயவர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான கார்ப்பரேட் ஊடகங்கள் அவ்வளவு எளிதில் பிரதானப்படுத்தி காட்டிவிடுவதோ, அல்லதுஎழுதிவிடுவதோ இல்லை. அந்த ஊடகங்களின்துரதிருஷ்டம், இனியும் இந்திய விவசாயிகளின் பேரெழுச்சியை நாட்டு மக்களின் கண்களிலிருந்து மறைத்துவிட முடியாது. டெல்லி காவல்துறையால் தில்லியில் திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தியதைப் போன்று, தலைநகரை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள் மத்தியில் புகுந்து கலவரத்தை நடத்திடவோ, பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல்களிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து சுட்டுத் தள்ளிவிடவோ முடியாது. ஒருவரல்ல, இருவர