பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை - தொடக்க விழா
பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை - தொடக்க விழா முன்னாள் மாணவர் கழகங்களின் வளர்ச்சியும் - சமூக மாற்றமும். -------------------------------------------------------------- பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறவைகளே! பழகிக் கழித்த தோழர்களே! பறந்து செல்கின்றோம் நாம்.... இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொருவரின் பள்ளி-கல்லூரி பருவ காலத்தின் நினைவுகளை சுமந்து தமிழ் மண்ணில் பசுமையாய் நிலைத்து நிற்கிறது. படித்த காலத்தின் நினைவுகள் பசுமையானது, நிகழ்காலத்தில் வெறுமையைத் தருவது. ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அடுத்த தலைமுறையைப் பார்த்து எங்களப்போல இந்த தலைமுறை இல்லை, நாங்கல்லாம் எப்படி மகிழ்ச்சியா இருந்தோம் தெரியுமா? என்று கூறுவதை பார்ப்போம். இதுதான் எதார்த்தம். எல்லோருக்கும் இளமைக்கால நினைவுகள் மற்றவற்களைவிட இனிமையானது, சுகமானது. எல்லாவற்றையும் தாண்டி நிகழ்காலத்தில் அரசுப்பள்ளிகளின் நிலை முன்னாள் மாணவர்களை வேதனை கொள்ளச் செய்கிறது. தற்கால அரசுப் பள்ளி மாணவர்களின் சவால்கள், அவர்களின் எதிர்காலம் குறித்தான முன்னாள் மாணவர்களின் அக்கறை எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை துளிர்விடச் செய்கிறது.