பழக்கமெல்லாம் பண்பாடாகிவிடுமா? - விபரீத வீர விளையாட்டு
பழக்கமெல்லாம் பண்பாடாகிவிடுமா? - விபரீத வீர விளையாட்டு தமிழர்கள் தங்களின் பண்பாடாக போற்றியது, அவர்களின் பொருள் செறிந்த (meaningful) வாழ்வை மட்டும்தான். பொருளற்ற சொற்களைக் கூட தமிழ் தன்னகத்தே வைத்திருக்காது. அறம் சார்ந்த தனது வாழ்வின் மூலம் உலகத்துக்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம் தமிழ் இனம். "அரிச்சந்திரா" நாடகம் மூலம் அர்த்தமற்ற சத்தியம் பரப்பப்பட்ட காலத்திற்கும் முன்பாகவே"பொய்மையும் வாய்மை.... நன்மை பயக்கும் எனின்" என்று அறம் போற்றிய "குறள்" கூறிய இனம் தமிழினம். புத்தருக்கு முன்பே காளையனையும் (ஆதிதீர்த்தங்கரர்), கபிலரையும் (ஆசீவக தத்துவ ஞானி) தந்த தத்துவ பூமி தமிழகம். தன்னை சிலுவையில் அரைந்த மக்களைப் பார்த்து பரிதாபப்பட்ட இயேசுநாதருக்கு முன்பே "இன்னா செய்தாருக்கும் இனியவே" செய்யும் சான்றாண்மை பகன்ற நாடு தமிழ்நாடு. ஆனால் வெற்றுச் சடங்குகளை தமிழர்களின் பண்பாடாக மாற்ற முற்படும் நிகழ்கால நிகழ்வுகள் வேதனையளிக்கிறது. ஏறு தழுவுதல் தமிழர்கள் கொண்டாடிய விளையாட்டாக இருந்திருக்கிறது. இவ்விளையாட்டின் மூலம் வீரத்தை க