இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முது பெரும் தொழிலாளர் வர்க்க போராளியும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவருமாகிய தோழர் ஏ.எம். கோபு வின் உடல் மறைவு

படம்
    முதுபெரும் விடுதலை போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பெரும் தலைவர் தோழர் ஏ.எம்.கோபு கடந்த 13.09.2012 இல் காலமானார்.   ஆரியர் வருகையாலும், அன்னியர் படையெடுப்புகளாலும் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியத் திருநாட்டில் அடிமைத்தனத்தில் பழகிப்போயிருந்த மக்களுக்கு விடுதலை உணர்வை தட்டியெழுப்பி அவர்களின் உயர்வுக்காக பாடுபட்டு தன் வாழ்வையே பொதுவாழ்வுக்காக ஈகமாய் வழங்கிய தலைவர்களுள் ஒருவர் தோழர் ஏ.எம். கோபு. இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருநீலக்குடி கிராமத்தில் மாணிக்கம் - கமலம் இணையர்களின் மகனாய் பிறந்தவர். தனது 8 ஆம் வகுப்பு பள்ளிப் படிப்பின் காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தவர். அதனால் ஒன்பதாம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்து படிக்க திருப்பனந்தாள் மடத்தின் தலையீட்டினால் அப்பகுதி பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டவர். பின்னர் தனது பள்ளிப் படிப்பை நாகையில் தொடர்ந்த கோபு, அங்கும் ஸ்டீல் ரோலிங் மில் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கல்லூரிப் படிப்பை புதுகை மன்னர் கல்லூரியில் தொடர்ந்த போது அங்கு டி.வி.எஸ் போராட்டத்திலும் ஈ

கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்

படம்
கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம் காரணங்கள் அணு ஆலைக்கு எதிராக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன . அவையானவை : மக்கள் நெருங்கி வாழும் இடத்தில் அணு ஆலை இயக்குவது அந்தச் சுற்றாடலில் வாழும் மக்களுக்கு நோய் வாய்ப்புக்களை அதிகரிக்கும் . அணு ஆலை விபத்து ஏற்படும் பட்சத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள் . முழுத் தமிழகமும் , வட இலங்கையும் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது . உயர் தொழில்நுட்பம் வாய்த்த சப்பான் , யேர்மனி போன்ற நாடுகளே அணு ஆலைகளை கைவிடும் பொழுது , இந்தியா அதை முன்னெடுப்பது சரியான வழிமுறை அல்ல . கட்டுமானம் சீர்தரத்துக்கு ஏற்ற முறையில் இல்லை . சுற்றுச்சூழல் பாதிப்படையும் . கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம் . தீவரவாதிகள் தாக்கலாம் . போராட்டக் குழுவின் வாதங்கள் இது கூடங்குளம் , இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை . கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும் என்பதால் கேரளத்து மக